July 17, 2018
தண்டோரா குழு
சென்னை அயனாவரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோர்களுடன் வசித்து வந்த 12 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வண்புணர்வு செய்த 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இதையடுத்து,கைது செய்யப்பட்ட 17 பேரை போலீசார் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில்,மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வண்புணர்வு செய்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் ட்விட் செய்துள்ளார்.அதில், ஏன் இந்த அரக்கர்களின் முகங்களை மங்கலாக்க வேண்டும் .. அவர்களை அவமானப்படுத்த வேண்டும் ..அவர்கள் அந்த சிறுமியை வன்கொடுமை செய்யும் போது அவர்கள் முகத்தை மறைக்கவில்லை. தற்போழுது அவர்கள் அவமானத்தால் உயிரைவிட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.