• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அவதார் ஹியூமன் கேபிடல் டிரஸ்ட் சார்பில் புத்ரி திட்டத்தின் “உத்யோக் உத்சவ் 2023” நிகழ்ச்சி

August 27, 2023 தண்டோரா குழு

அவதார் குழுமத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனமான அவதார் ஹியூமன் கேபிடல் டிரஸ்ட் சார்பில் புத்ரியின் 8வது பதிப்பு மற்றும் அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம் இணைந்து ‘உத்யோக் உத்சவ் 2023’ நிகழ்ச்சியை கோயம்புத்தூர் வடகோவையில் உள்ள அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் நடத்தியது.

நிகழ்ச்சிக்கு, முதன்மை விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.அவதார் ஹியூமன் கேபிடல் டிரஸ்ட் அறங்காவலர் உமாசங்கர் கந்தசாமி வரவேற்புரை வழங்கினார். அவதார் ஹியூமன் கேபிடல் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் சௌந்தர்யா ராஜேஷ் தலைமை தாங்கினார். அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் பாரதி ஹரிசங்கர் முன்னிலை வகித்தார்.

புத்ரி திட்டம் என்பது இந்தியாவின் முதல் வளர்ச்சித் திட்டமாகும்.இத்திட்டத்தின் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மாணவிகளிடையே தொழில் நோக்கத்தை உருவாக்க உதவுகிறது.ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அவதார் ஹியூமன் கேபிடல் அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து,புத்ரி திட்டத்தில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 11,000 க்கும் மேற்பட்ட மாணவிகளின் தரத்தை மாற்றியுள்ளது. உத்யோக் உத்சவ், புத்ரி திட்ட முயற்சியானது, இந்தியாவின் பின்தங்கிய பெண்களின் கல்விப் படிப்புகள் மற்றும் வாழ்க்கைப் பாதைகளை மாற்றியுள்ளது.

அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்ற உத்யோக் உத்சவ் 2023 நிகழ்ச்சியில், ஒன்பது அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த கருத்தரங்கில் மாணவிகள் தங்களை திறனை மேம்படுத்தும் விதமாக பாதுகாப்பு, தகவல் தொடர்பு திறன், திட்ட மேலாண்மை திறன், குழு விவாதம் உள்ளிட்டவை கற்பித்து கொடுக்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள் பள்ளிகளில் இருந்து கல்லூரி மற்றும் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதற்கு தங்களைச் சிறந்த மாணவிகளாக உருவாக்குவதே அவதார் ஹியூமன் கேபிடல் டிரஸ்டின் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

நிகழ்ச்சியில் அவதார் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ், பேசுகையில், “புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் பெண் பணியாளர்களின் பங்களிப்பு 24 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் பிரகாசமாக வளர்ந்துள்ளன. “உத்யோக் உத்சவ் நிகழ்ச்சி மூலம் பெண்களின் தனி திறமைகளுக்கென இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் பிரதாப் தனது உரையில், “பெண் கல்வி என்பது ஒட்டுமொத்த தேசத்தின் நலனுக்கானது. புத்ரி திட்டம் பெண் மாணவர்களிடம் தொழில் நோக்கத்தை ஊக்குவிக்கிறது, சந்திரயான் 3 இல் பணிபுரிந்த 50 க்கும் மேற்பட்ட பெண் விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டு அவர்கள் முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் திறவுகோலாக உள்ளனர். நான் முதல்வன் போன்ற அரசின் முன்முயற்சிகளும் பெண்களுக்கு உதவியாக உள்ளது என தெரிவித்தார்.

அவினாசிலிங்கம் பல்கலைக்கழக மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பாரதி ஹரிசங்கர் பேசுகையில், “உங்கள் தொழில் என்பது நிதி அதிகாரம் மட்டுமல்ல, சமூகங்களை மாற்றுவதற்கான வழிமுறையாகவும் உள்ளது.எனவே நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதில் உங்கள் இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி அர்ப்பணிப்புடனும் கவனத்துடனும் செயல்படுங்கள் என தெரிவித்தார்.

மேலும் படிக்க