• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அவசர சிகிச்சைக்கு இரத்ததானம் செய்த இரண்டு காவலர்களுக்கு பாராட்டு !

January 30, 2021 தண்டோரா குழு

கொரோனா கால நேரத்தில் அவசர சிகிச்சைக்கு இரத்ததானம் செய்த இரண்டு காவலர்களுக்கு கோவை மாவட்ட வூசு சங்கம் சார்பாக வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு வழங்கி காவலர்களை பாராட்டினார்.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கடுமையான கொரோனாவை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் முழு ஊரடங்கை பிறபித்திருந்தன.இந்நிலையில் நோய் தொற்றுக்கு பயந்து இரத்த தானம் செய்பவர்களும் அதிகம் முன் வராததால் அரசு மருத்துவமனை உட்பட பல்வேறு மருத்துவமனைகளில் இரத்த பற்றாக்குறை ஏற்பட்டது.

இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த மகேஷ்,சசிகுமார் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் கோவை தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான இரத்தத்தை தானம் செய்தனர். கொரோனா காலத்தில் இந்த இரண்டு காவலர்களும் செய்த அவசர உதவியை காவல்துறை அதிகாரிகள் பலர் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் இவர்களது சமூக பொறுப்புணர்வை பாராட்டி கோவை மாவட்ட வூசு சங்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு காவலர்கள் மகேஷ் மற்றும் சசிகுமாரை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.இதில் கோவை மாவட்ட வூசு சங்கத்தலைவர் கணேசன் உடனிருந்தார்.

மேலும் படிக்க