• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அழிந்து வரும் மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்க கோவை மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு

October 14, 2019 தண்டோரா குழு

அழிந்து வரும் மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்க கோவை மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் விவசாய உற்பத்தியில் மஞ்சள் விவசாயம் நாளடைவில் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு குறைந்து கொண்டு வருகிறது. மஞ்சள் விவசாயம் மேட்டுப்பாளையம், அன்னூர், சத்தியமங்கலம், தொண்டாமுத்தூர், சிறுமுகை, சுல்தான்பேட்டை, சூலூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் மேற்படி மஞ்சள் சாகுபடி ஆள் பற்றாக்குறை உற்பத்தி செலவு, தட்பவெப்ப சூழ்நிலை உற்பத்தி மகசூல் பாதிப்பு மற்றும் விலை பற்றாக்குறை போன்ற காரணங்களால் மஞ்சள் சாகுபடி பரப்பளவு குறைந்து வருகிறது.மஞ்சள் உற்பத்திக்கு விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காமல், நஷ்டம் ஏற்பட்டு வருவதால், மஞ்சள் சாகுபடி என்பது முற்றிலும் கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்க மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இக்கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள் சங்கத்தினர், மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி ஆராய்ந்து தக்க அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பித்து அழிந்து வரும் மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க