June 2, 2018
மஞ்சு தாமோதரன்
ஒரு நாட்டின் கலை மற்றும் கலாச்சாரம் அச்சமுகத்தினை பிரதிபலிக்கும் சிறந்த கருவி ஆகும்.கலை என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி தகவல் ஊடகமாகவும் திகழ்கின்றது.கலை என்பது மன உணர்வுகளின் வெளிப்பாடு குறிப்பாக நாட்டுப்புற கலைகள் நமது மண்ணோடும்,நம்மோடும் தொடர்புடையது.நமது பாரம்பரியத்தையும் அடி ஆழத்து வேர்களையும் பிரதிபலிப்பவை கலை.சமூக வளர்ச்சிக்கும் மன எழுச்சிக்கும் சிறந்த கருவி.
நமது முன்னோர்களின் நம்பிக்கைகள் எண்ணங்கள் சிந்தனைகள் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை நாட்டுப்புற கலைகள் மூலம் அறிய முடிகிறது.இக்கலைகளே சமுதாயத்தின் ஆவணமாகத் திகழ்கின்றது.இக்கிராமிய கலைகள் தகவல் பரப்பும் ஊடகமாகவும் பழக்க வழக்கப் பண்பாட்டு வட்டமாகவும் திகழ்கிறது.
இன்றய காலகட்டங்களில் தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டு உள்ளன.இதனால் தகவல் தொடர்பிற்கும் பொழுது போக்கிற்கு பல்வேறு ஊடகங்கள் உருவாகி வருகின்றன. இம்மாறுதல்கள் இயற்கையானதே இதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.இந்த வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் நாம் நம் பாரம்பரிய கலைகளை மறந்து வருகின்றோம் என்பதை அறிந்து கொள்வதில்லை.
நம்முடைய பாரம்பரிய கலைகளை அழிந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.இது ஒவ்வொருவரின் கடமையும்,பொறுப்பும் அனைவரிடத்திலும் உள்ளது.ஆனால்,நாம் இதை மறந்து தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகி பாரம்பரிய கலைகளை மறந்து வருகிறோம்.தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அடைந்த நாடுகளும்,அதிநவீன நாகரீகத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நாடுகளும் கூட தங்கள் பாரம்பரிய கலைகளை புறக்கணித்து விடாமல் அதன் வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளன.
நமது இந்திய கிராமங்கள் ஒவ்வொன்று சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றினைக் கொண்டுள்ளன.இவை தனக்கே உரித்தான தன்மைகளையும் சிறப்புகளையும் கொண்டவை.வாழ்ந்து பெற்ற அனுபவங்களை கலவையாக நமது முன்னோர்கள் சில களைகளாக நமக்கு அளித்துள்ளனர். அவை பொழுதுபோக்காக மட்டுமின்றி மன நல வளர்ச்சிக்கும் வளம் சேர்ப்பதாகவும் அமைந்திருப்பதை அறிய முடிகிறது.
இந்திய நாட்டுபிறக்கலைகளில் தமிழக நாட்டுபுறக் கலைகள் பல்வேறு வகையில் சிறப்பும் தனிதன்மையும் கொண்டவை.இவைகளை “நிகழ்ந்த கலைகள்,நிகழாத கலைகள்,பொருட்கலை”, என நாட்டுப்புறவியல் வல்லுநர்கள் வகைப்படுத்தி உள்ளன.இப்படிப்பட்ட பழமையான கலைகளை நம் தமிழர்கள் அழித்து வருகின்றன.நாட்டுபுறக்கலைகள் பற்றி எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் உள்ளன.தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியினால் நகரபுரங்களில் இக்கலைகள் முழுமையாக அழிந்து வரும் நிலையில் உள்ளது.
இந்த அழிந்து வரும் நாட்டுபுறக்கலையை காப்பதற்காக கருமத்தம்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ் அவர்கள் தானாகவே முன் வந்து இந்த கலையை காப்பதற்காக ஒவ்வொரு பள்ளிகள்,கல்லூரிகள் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் சென்று இலவசமாக நாட்டுபுறக்களிகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் முதலியவற்றை கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இவர் 1990ல் கிராமியக்கலைகளை கற்றுக்கொண்டார்.அதிலிருந்து கிராமியக்கலைகள் மூலம் ஆர்வம் வந்து இந்த கலையை அனைவருக்கும் கற்று கொடுத்து,அழிந்த வரும் கிராமியக்கலைகளை காக்க வேண்டும் என்ற நோக்கில் 2010 ஆம் ஆண்டு சங்கமம் கலைக்குழுவை ஆரம்பித்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நாட்டுபுறக்கலையை பற்றி விழிப்புணர்வு மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்து இக்கலைகளை கற்று கொள்ள வழிவகுத்தார்.
இந்த குழுவில் உள்ளவர்கள் மூலம் இலவசமாக அனைவருக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.இதில் 8 ஆண்டுகளில் 850 கலைஞர்களை உருவாக்கியுள்ளார்.இதில் ஆண் பெண் என வேறுபாடு கிடையாது ஆர்வம் உள்ள அனைவரும் இக்கலையை இலவசமாக கற்று கொள்ளலாம்.3 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் இந்த கலையை கற்றுக்கொள்ளலாம்.சங்கமம் கலைக்குழு மூலம் இதுவரை 150 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. பெண்களும் இந்த கலையை மிகுந்த ஆர்வத்துடன் கற்று கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் ஆடுபவர்களும் பயிற்சியின் போதும் பாரம்பரிய கலாச்சாரம் மிகுந்த உடை அணிவது வழக்கம் ஏனென்றால் இது நம் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கலை என்பதால் அவர்கள் கலாச்சார உடை அணிக்கின்றன.எங்கு இவர்கள் நிகழ்ச்சி நடத்தினாலும் அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஒரு “மரக்கன்று” நடுவது வழக்கம் இதன் மூலம் இயற்கையை பாதுகாக்க முடியும்.
மேலும், இந்த கலையை கற்று கொள்வதன் மூலம் நம் மன அழுத்தம் குறையும்,உடல் ஆரோக்கியமான முறையில் இருக்கும் எல்லோரிடமும் சுலபமாக பழக முடியும்.இதை ஒரு சேவை நோக்கோடும் அழுந்து வரும் கலையை காப்பாற்றவும் இதை செய்வதாக கூறினார்.
இவரை போல் ஒவ்வொரிவரும் தொழில்நுட்பங்களுக்கு அடிமை ஆகாமல் அழிந்து வரும் நாட்டுபுறக் கலையை காக்க முயற்சி எடுக்க வேண்டும்.அப்போது தான் நம் தமிழகத்தின் தனித்தன்மையை வெளிக்காட்ட முடியும்.நாட்டுபுறக் கலைகளை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொடுவரின் கடமை ஆகும் அதை காப்பதும் காப்பாற்றமல் இருப்பதும் நம் கையில்!