• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அலாரம் மணியை நிறுத்தியதால் உயிர் தப்பிய நபர்

March 3, 2017 தண்டோரா குழு

பலத்த மழை பெய்யும்போதோ புயல் வீசும்போதோ மக்கள் இரவு நேரத்தில் பயத்தோடு இருப்பர். சிலர் தூங்காமல் விழித்திருப்பர். வெளிநாடுகளில் புயல்மழை வீசும்போது, பலத்த சேதம் ஏற்படுத்தும். அதிலிருந்து தப்பிக்க வீட்டின் கீழ் பகுதியில் ஒரு அறையைத் தயார் செய்து, புயல்மழை உண்டாகும் அறிகுறிகளைக் கண்டவுடனே, தங்கள் குடும்பத்தினருடன் அந்த அறையில் பதுங்கி தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வர்.

அதே போல், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் தலைநகரான ஆஸ்டினில் வசித்த ரேமண்ட் என்பவருடைய உயிர் வேறு வழியில் காப்பற்றப்பட்டது.

ஆஸ்டின் நகரில் இடியுடன் கூடிய பலத்த மழை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) பெய்தது. இதனால் சரியாகத் தூங்க முடியாமல் அவதிபட்டார் ரேமண்ட். காலையில் அவர் பணிக்குச் செல்லவேண்டும் என்பதற்காக இரவு படுக்கும் முன் அதிகாலை 5.3௦ மணிக்கு அலாரத்தை வைத்தார். சரியாக அதிகாலை 5.3௦ மணியளவில் அலாரம் ஒலித்தது. இரவு முழுவதும் சரியாக தூங்காததால் படுக்கையிலிருந்து உடனே எழும்ப மனமில்லாமல், அலாரம் இயங்குவதை அணைத்தார்.

சில நிமிடங்களில், வீட்டுக்குள்ளேயிருந்து ஏதோ உடைந்த சத்தம் கேட்டது. என்னவென்று பார்ப்பதற்காகக் குளியல் அறைக்குச் சென்றுள்ளார். அவர் கண்ட காட்சி அவருக்கு அதிர்ச்சியை அளித்தது. அவருடைய வீட்டின் அருகிலிருந்த 40 அடி ஓக் மரம் வீட்டின் கூரையை உடைத்துக்கொண்டு குளியல் அறைக்கு உள்ளே விழுந்திருந்தது! இதில் விநோதம் என்னவென்றால் அவர் வழக்கமாகப் பல் துலக்கும் இடத்திற்கு நேராகக் விழுந்திருக்கிறது.

“ஒரு வேளை காலை அலாரம் அடித்தவுடனேயே படுக்கையில் எழுந்திருந்தால், நிச்சயம் நான் மரணத்தைச் சந்தித்திருப்பேன். காலையில் பணிக்குச் செல்லவேண்டும் என்று படுக்கையிலிருந்து எழுந்தேன். ஆனால், அலாரம் இன்னொரு முறை அடிக்கட்டும் என்று நினைத்து மீண்டும் படுத்துவிட்டேன். நான் படுத்து சில நிமிடங்களில் இந்த சம்பவம் நடந்தது. கடவுள் என்னை இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றிவிட்டார்” என்றார் ரேமண்ட்.

மேலும் படிக்க