• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் கல்வெட்டில் முதல்வர் பெயர் வைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

January 7, 2019 தண்டோரா குழு

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலில் முதல்வர் பெயரில் கல்வெட்டு வைப்பதாக எம்எல்ஏ அறிவித்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு நிலவியது.

ஆண்டு தோறும் ஜனவரி 17-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த ஆண்டிற்கான
ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில்அதனை பார்வையிட வந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் வாடிவாசல் அருகே காளை வெளியே வரும் பகுதியில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பெயரை கல்வெட்டில் பொறிக்க பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதை கேட்டு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் அதிரச்சியடைந்தனர்.

பின்னர் பொது மக்கள் சட்டமன்ற உறிப்பினரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு காவல்துறையினரை வரவழைத்து சமரசம் செய்ய முயற்சித்தனர். எனினும் ஊர் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் திடீரென கோபமாக காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

மேலும் படிக்க