• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அற்புதம் நிகழும், அதிசயம் நிகழும் என்று சொல்வதை மக்கள் ரசிக்கின்றனர் ஏற்றுக்கொள்ளவில்லை – தமிமுன் அன்சாரி

November 27, 2019 தண்டோரா குழு

அற்புதம் நிகழும், அதிசயம் நிகழும் என்று சொல்வதை மக்கள் ரசிக்கின்றனர். ஆனால் ஏற்றுக்கொள்ளவில்லை என மனித நேய ஜனநாயக கட்சி பொதுசெயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

கோவையில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களில் சுமார் 10 பேருக்கு அக்கட்சியின் சார்பில் ஆட்டோக்கள் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி,

காவல் துறையில் தமிழ்மொழியில் தகவல் தொடர்புகள் இருக்கும் என்ற டி.ஜி.பி திரிபாதியின் உத்திரவு வரவேற்கதக்கது. மராட்டியத்தில் நடந்த சூழல் ஜனநாயகத்திற்கு மிக பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இப்போது நல்ல சூழல் திரும்பி இருக்கிறது. மராட்டியத்தில் நடைபெற்ற பெருந்தவறுக்கு துணை போன ஆளுநர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மராட்டிய ஆளுநரை திரும்ப பெற வேண்டும்.மத்திய அரசு ஆளுநர்களை கொண்டு இரட்டை நிர்வாகத்தை மேற்கொள்ள முயற்சிக்ககூடாது எனக்கேட்டுக்கொண்டார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியில் செய்வதை போல மராட்டியத்தில் ஆளுநர் செய்கின்றார்.இது ஜனநாயக படுகொலை இது போன்ற ஆளுநர்களை திரும்ப பெறும் போது பிறமாநில ஆளுநர்கள் இந்த தவறை செய்ய மாட்டார்கள்.எனத்தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்த வரை மேயர், நகராட்சி தலைவர்கள் பொறுப்புகளை நேரடியாக தேர்வு செய்வதுதான் சரியாக இருக்கும் என்றும் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக, கோடம்பாக்கத்தில் உறங்கி கொண்டு இருந்த சிலரை தூண்டிவிட்டு வடமாநிலத்தை சேர்ந்த சக்திகள் சொல்ல வைப்பதாகவும் கோடம்பாக்கத்தில் இருந்து அரசியல் அதிகாரத்திற்கு வர விரும்புகின்றனர்.அது தவறில்லை. ஆனால் வெற்றிடம் இருப்பதாக தவறான தகவலை பரப்பி கொண்டு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தமிழக அரசியலில் வெற்றிடத்தை நிரப்பி இருப்பதாகவும், தங்களது இருப்பை உறுதிப்படுத்த சிலர் வெற்றிடம் இருப்பதாக பேசிக்கொண்டு இருக்கின்றனர்.எனக் கூறிய தமிமுன் அன்சாரி, அடுத்த 20 ஆண்டுகளுக்கு திராவிட கட்சிகள்தான் தமிழகத்தில் ஆட்சி செய்யும். அற்புதம் நிகழும், அதிசயம் நிகழும் என்று சொல்வதை மக்கள் ரசிக்கின்றனர். ஆனால் ஏற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெற வேண்டும் என்பது மனித நேய ஜனநாயக கட்சியின் நிலைப்பாடு. குருமூர்ர்தியின் அதிமுக குறித்த விமர்சனங்கள் கவலையளிப்பதாகவும், இதற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தான் பதில் அளிக்க வேண்டும். ஜெயலலிதா இருந்திருந்தால் அதிமுக மீது இது போன்ற விமர்சனங்களை வைத்திருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க