March 10, 2021
தண்டோரா குழு
மகளிர் தின ஸ்பெஷலாக தொழில்துறை தலைவர்கள், இன்னொவேட்டர்கள் மற்றும் பாலிசி மேக்கர்கள் ஆகியோர் கலந்துகொண்ட சிறப்பு குழு விவாதத்தை பிக்கி ஏற்பாடு செய்தது.துவக்க உரையை இந்திய அரசின் பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் வழங்கினார், அவர் நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கை குறித்து பேசினார்.
இந்தியாவில் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியில் பெண்கள் ஆற்றியுள்ள பங்கு குறித்து டாக்டர் அஜய் குமார் பேசும்போது, “
பாதுகாப்புத்துறை அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையாக இருந்தாலும் பெண்களின் முன்னேற்றம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. நாட்டில் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எனக்கு நன்கு நினைவிருக்கிறது. உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப அவுட்சோர்சிங் இடமாக இந்தியா மாறியதற்கு, நம்முடைய பெண்களின் பங்கு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஐ.டி.யில் பணிபுரியும் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பெண்கள். எலக்ட்ரானிக் உற்பத்தியில் கூட, நான் நெருக்கமாக அனுகியதில் தெரிந்தது என்னவென்றால், அந்தத் துறையிலும் பெண்களின் பங்கு தனித்துவமனதாக உள்ளது என்பதே” என்றார்.
தொடர்ந்து, கலந்துரையாடலின் நிகழ்வு துவங்கியது. ஜூபியின் தலைமை கார்ப்பரேட் விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அலுவலர் டாக்டர் சுபி சதுர்வேதிக்கு பொருத்தமான மற்றும் சிறப்புமிக்க கலந்துரையாடலை ஏற்பாடு செய்தமைக்காக டாக்டர்.குமார் நன்றி தெரிவித்தார். பெண் முன்னேற்றத்தில் பெண்களுக்கான ரோல் மாடலாக விளங்குபவர் சுபி சதுர்வேதி என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பத் துறையில் பெண்கள் அதிகரித்துவருவது குறித்து கலந்துரையாடலில் பிக்கி-இன் தொழில்நுட்பத்திற்கான பெண்கள் அமர்வுத் தலைவர் டாக்டர் சுபி சதுர்வேதி கூறுகையில்,
“தொழில்நுட்பத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள் உள்ளார்ந்த பயனர் மைய அணுகுமுறையோடு கையாளுவதால் பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காண்கிறார்கள். பீட்டர்சன் இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுகளின் படி, பெண் தொழிலாளர்களை 30 சதம் அதிகமாகக் கொண்டுள்ள நிறுவனங்கள் 15 சதம் கூடுதல் லாபத்தை ஈட்டுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
பெண்களை மேம்படுத்துவதில் தொழில்நுட்பத்தின் பங்கை வலியுறுத்தி, அடல் இன்னொவேஷன் மிஷனின் இயக்குனர் ஆர். ரமணன் பகிரும்போது, “ பெண்கள் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மேலாண்மை) துறைகளில் பிரகாசிப்பதை நாங்கள் காண்கிறோம், எனவே இது ஆச்சரியமல்ல. இந்திய அரசு தனது பல்வேறு முயற்சிகளின் மூலம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளிலும் ஆண்களுக்கு இணையான இடத்தைப் பெண்கள் பெறவு, வாய்ப்புகளை அமைத்துக் கொள்ளவும் முடியும் என்பதை உறுதியாக சொல்ல முடிகிறது” என்றார்.
குழு உறுப்பினர்களில் பெண்கள் தலைவர்கள் மற்றும் அந்தந்த துறைகளில் நிபுணர்களான செல்வி.தீபாலி உபாத்யாய், திட்ட இயக்குநர்- அடல் டிங்கரிங் லேப்ஸ், அடல் இன்னொவேஷன் மிஷன் (ஏஐஎம்), என்ஐடிஐ ஆயோக்; கெளரி கோக்லே, தலைமை ஊடக மற்றும் பொழுதுபோக்கு பயிற்சி, நிஷித் தேசாய் அசோசியேட்ஸ்; யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் துணைத் தலைவரும், நாட்டின் தலைவருமான திருமதி. சுவாதி ரங்காச்சாரி, பொது விவகாரங்கள் மற்றும் மூலோபாய ஈடுபாடுகள்; மிஸ். என்.எஸ். நாப்பினாய், பிரபல வழக்கறிஞர், நிறுவனர் சைபர் சாதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தலைமைப் பண்புகளிலும், உயர் பொறுப்புகளிலும் பெண்களின் பங்களிப்பும், முன்னேற்றத்தையும் விதமாக இந்த மகளிர் தினத்தில் சிறப்புமிக்க கலந்துரையாடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அதோடு, STEM-இல் பெண்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக டாக்டர் சதுர்வேதி ஒன்று கூறினார். அதாவது, 2030 ஆம் ஆண்டில் STEM-இல் பெண்களின் சதவீதத்தை 30 சதம் ஆக உயர்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். புதுமையான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, அதாவது கேம் குறித்த கற்றல், திறன் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றையும் பயன்படுத்தவும் அழைப்பு விடுத்தார்.
சர்வதேச மகளிர் தினம் 2021 க்கு, தீம்மாக #ChooseToChallenge மற்றும் கல்வி மற்றும் முன்னேற்றத்தின் மூலம் பாலின சமத்துவமின்மையை சவால் செய்ய வேண்டியதன் அவசியத்தை குழு எடுத்துரைத்தது. பெண்களின் சாதனைகளை கொண்டாடுவதில் சமத்துவமின்மை, பெண்களுக்கான விழிப்புணர்வு, சமத்துத்திற்காக நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றை மேற்கொள்ல குழு இறுதியாக முடிவெடுத்தது.FICCI ஏற்பாடு செய்த முதல் சிறப்பு மிக்க கலந்துரையாடலாகும்.