• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அறிவியல் சிறப்பு அம்சங்களுடன் அறிவியல் பூங்கா மேம்படுத்தப்பட்டுள்ளது -மாநகராட்சி கமிஷனர் தகவல்

August 28, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் டாடாபாத்,அழகப்பா செட்டியார் சாலையில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் 30 சென்ட் பரப்பளவு கொண்ட இடத்தில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

அறிவியல் பூங்காவில் பார்வையாளர் நேரம் காலை 07.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது.நுழைவுக்கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.

இந்த அறிவியல் பூங்காவில் பெரிஸ்கோப் மாதிரி, பி.எஸ்.எல்.வி.ராக்கெட் மாதிரி, சந்திராயன் 3 மாதிரி, ஈர்ப்பு கருவிகள், டாக்டர்.அப்துல்கலாம் சிலை, கார் கட்டமைப்பு, மழை வில் வளைவு, சுழலும் பெரிஸ்கோப், ஒலியின் வேகம், தனிம அட்டவணை, அலை இயக்கம், ஈர்ப்புபந்து, நியூட்டன் 3வது விதி, பாஸ்கல்f சட்டம், மைய விலக்கு விசை, கியர்பெல் மற்றும் செயின் டிரைவ், ஆற்றல் நிறை மற்றும் மந்த நிலையில் பாதுகாப்பு, மோபியஸ் இசைக்குழு, உணர்வுச்சுவர், உலக நேர குளோப் வகை, ஈரப்பதம் அளவிடும் மீட்டர், மணிக்கூண்டு, எதிரொலிகுழாய், சூரிய குடும்பம், மழை அளவி உள்ளிட்ட அறிவியல் சிறப்பு அம்சங்களைக் கொண்ட பூங்காவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, பயன்பெறலாம் என மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க