• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருந்ததியர் மாணவன் தாக்கபட்டதை கண்டித்து திராவிடர் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

October 16, 2019 தண்டோரா குழு

அருந்ததியர் மாணவன் தாக்கபட்டதை கண்டித்து கோவையில் திராவிடர் தமிழர் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் பாலமேடு மரவபட்டி அரசு பள்ளியில் பயிலும் அருந்ததிய மாணவன் சரவணகுமார் அப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 13ம் தேதி பேருந்து நிலையத்தில் புத்தக பையை சரவணகுமார் எடுத்து மறைத்து வைத்ததாக இதே பள்ளியில் பயிலும் மாணவன் ஈஸ்வரன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.தான் அதை எடுக்கவில்லை என சரவணகுமார் கூறியதால் என்னை எதிர்த்து பேசுகிறாயா என கூறி ஈஸ்வரன் தன்னிடம் இருந்த பிளேடு கொண்டு சரவணகுமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து முதுகு பகுதியில் பலத்த காயம் அடைந்த சரவணகுமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவத்தை கண்டித்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிட தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அருந்ததிய மாணவர் சரவணகுமார் மீதான சாதி வெறி தாக்குதலை கண்டித்து கண்டன் முழக்கங்கள் எழுப்பினர்.மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் நடைபெறும் தீண்டாமை வன்கொடுமைகளில் ஈடுபடுவார்கள் மீது அரசு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க