April 15, 2021
தண்டோரா குழு
கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில்,அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தல் இன்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து, அடுத்த 8 வாரத்தில் அரியர் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.