November 15, 2017
தண்டோரா குழு
சூடான் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இடையே உள்ள பகுதிக்கு இந்தியாவை சேர்ந்த ஒருவர் தன்னை அரசனாக அறிவித்துள்ளார்.
எகிப்து எல்லையின் தென் பகுதிக்கும் சூடான் நாட்டின் வடக்கு பகுதிக்கும் இடையே‘பிர் தவில்’ என்ற வறண்ட பாலைவனப்பகுதி உள்ளது. இதுவரை அந்த பாலைவனப்பகுதியை யாரும் உரிமை கோரவில்லை.இந்நிலையில் இந்திய நாட்டை சேர்ந்த சுயாஷ் திக்ஷித் என்பவர் அந்த நிலத்திற்கு தன்னையே அரசனாக அறிவித்துள்ளார்.
எகிப்து ராணுவத்தின் அனுமதியுடன் இந்த பகுதிக்கு வந்துள்ள திக்ஷித், அங்கு விதைகளை விதைத்து அதற்கு தண்ணீரும் ஊற்றியுள்ளார். ஏற்கனவே சிலர் இப்பகுதிக்கு சொந்தம் கொண்டாடியுள்ளனர். இருப்பினும் தற்போது நான் தான் இப்பகுதிக்கு அரசன். உங்களுக்கு வேண்டுமென்றால் போரிட்டு எடுத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.மேலும் தன்னுடைய ராஜ்யத்திற்கு ‘தி கிங்டம் ஆப் திக்க்ஷிட்’ என்று பெயரிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.