• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ரவிச்சந்திரனுக்கு கோவை மாவட்ட திமுகவினர் வாழ்த்து

October 19, 2021 தண்டோரா குழு

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு மாவட்ட அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ரவிச்சந்திரன் உள்ளிட்ட வழக்கறிஞர்களுக்கு கோவை மாவட்ட திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட கோவை மாவட்ட அரசு வழக்கறிஞர் வி. இரவிச்சந்திரன், கோவை மாவட்ட சார்பு நீதிமன்றங்கள் கூடுதல் அரசு வழக்கறிஞர் ப. கிருஷ்ணமூர்த்தி, கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆர். விஜயராகவன்,அரசு வழக்கறிஞர் வெ.சிவகுமார்,சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் சி. கண்ணன், முத்து விஜயன் ஆகியோர்,
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் அறையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு வழக்கறிஞர்களுக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ. அவர்கள், மற்றும் கணபதி பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர் கணபதி எம்.சம்பத்குமார் மற்றும் திமுக உறுப்பினர்கள் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில், வழக்கறிஞர்கள் கே.எம்.தண்டபாணி,கணேஷ்குமார், ம. மகுடபதி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், பகுதி கழக பொறுப்பாளர்கள் வம.சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணியம், சிங்கை சிவா, நாகராஜ், மற்றும் திரளான வழக்கறிஞர்கள், திமுகவினர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க