May 5, 2021
தண்டோரா குழு
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்சிஐன் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் குறித்து கடந்த செவ்வாயன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து புதனன்று கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் ஆகியோரை சந்தித்து மருத்துவமனைகளின் தற்போதைய நிலவரம் மற்றும் ஆக்சிஜனுக்கான தேவை இதர மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.