• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு பொருட்கள் ஆட்சியர் வழங்கினார்

April 2, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் அறக்கட்டளைகளுடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆட்சியர் சமீரன் தலைமையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தனியார் அறக்கட்டளைகளுடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து ‘உடல்நல மற்றும்‌ மனநல பாதுகாப்பு’ திட்டத்தின் கீழ்‌ சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2500 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள 3 பள்ளிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள 7 பள்ளிகள் என மொத்தம் 10 பள்ளிகளிலிருந்து தலா 15 மாணவ-மாணவிகள் வீதம் 150 மாணவ- மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்‌.

இவர்களுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை ஆட்சியர் சமீரன் துவங்கி வைத்தார்.இச்சத்துணவு தொகுப்பில்‌ பச்சை பயிறு, சிவப்பு அரிசி, கொள்ளு, வெள்ளை சுண்டல்‌, தட்டை பயிறு, பாதாம்‌, சோயா, அவல்‌, கருப்பு சுண்டல்‌, பேரிச்சம்பழம்‌, பச்சை பட்டாணி, முந்திரி, ராகி, கம்பு, சாமை, வரகு மற்றும்‌ அத்தி போன்றவைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க