• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு பள்ளி மாணவர்களின் ஆட்டோ பயணத்திற்கு மாதம் ரூ.20 வழங்கும் ஓய்வூதியர் !

June 2, 2018 தண்டோரா குழு

சிவகங்கையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவர் அரசு பள்ளி மாணவர்கள் பயணிப்பதற்கு மாதம் 20 ஆயிரம் ரூபாயை ஆட்டோ கட்டணமாக வழங்கி வரும் சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கோவானூரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் சித்தலூர் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.ஆனால்,கோவானூரில் இருந்து சித்தலூர் செல்லும் பாதை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதனால் கோவானுரைச் சேர்ந்த மாணவர்கள் பெரியக்கோட்டையில் உள்ள பள்ளியில் சேர்ந்து படித்து வந்தனர். அவர்களை சித்தலூர் பள்ளியில் சேர்க்க தலைமை ஆசிரியர் பீட்டர் முயற்சி எடுத்தார். ஆனால் வாகன வசதி ஏதும் இல்லாத காரணத்தால் குழந்தைகளை சித்தலூர் பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் சித்தலூர் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற முனியாண்டி என்பவர் 2 ஆட்டோக்களை ஏற்பாடு செய்து அதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாயை மாதந்தோறும் தானே வழங்குவதாகவும் ஒப்புக் கொண்டார். இதனால் பெற்றோர்கள் 24 குழந்தைகளை சித்தலூர் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முனியாண்டி கூறுகையில்,

எனது மகன் நல்ல நிலையில் உள்ளான். எங்களுக்கு தேவையான அனைத்தும் என் மகனே பார்த்து கொள்கிறான்.இதனால் எனது ஓய்வூதியத் தொகையை ஏழை மாணவர்கள் ஆட்டோவில் செல்ல செலவழிக்கிறேன்.

இதுமட்டுமன்றி, முனியாண்டி பள்ளிவசதிக்காக சமீபத்தில் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

மேலும் படிக்க