February 26, 2018
தண்டோரா குழு
கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறி பள்ளி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவையை அடுத்த அனுப்பர்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டபள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த சில மாதங்களாக ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுத் தேர்வுக்கு கூட மாணவர்கள் சரியாக தங்களது பாடங்களை பயில முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது . இந்நிலையில் ஆசிரியர் பற்றாக்குறைக்கு நடவடிக்கை எடுக்க அப்பள்ளி மாணவர்கள் பள்ளி சீருடையுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பள்ளி மாணவர்கள் பலரும் பாதிக்கப்படுவதால் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.