• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு பள்ளிக்கு 3 லட்சம் செலவில் புதிய கழிப்பறை அர்ப்பணிப்பு !

August 28, 2020 தண்டோரா குழு

ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் வெஸ்ட் சார்பாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை பள்ளி பயன்பாட்டிற்கென அர்ப்பணிப்பு செய்யப்பட்டது .

கொரோனா தொற்று பரவலை தடுக்க சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றும்படி மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை புணரமைப்பது,மேலும் புதிய கழிவறைகள் கட்டி கொடுப்பது மற்றும் மலைவாழ் மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பது என பல்வேறு சமூக பணிகளை கோவை மேற்கு ரோட்டரி சங்கம் செய்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் மூன்று இலட்சம் செலவில் புதிதாக கழிப்பறை கட்டி அதனை பள்ளிக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கோயமுத்தூர் மேற்கு ரோட்டரி சங்கம் தலைவர் இளங்கோ மற்றும் செயலாளர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் ரிப்பன் வெட்டி புதிய கழிப்பறை பள்ளிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.மேலும் ஏற்கனவே இருந்த கழிப்பறையும் புணரமைக்கப்பட்டது. கொரொனா கால ஊரடங்கு முடிந்து பள்ளிக்கு வரும் குழந்தைகள் சுகாதாரமான முறையில் இருப்பதெற்கென இந்த பணிகளை மேற்கொள்வதாக ரோட்டரி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் துணை ஆளுநர் தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க