• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசுப் பள்ளிகளுக்கு ரூ .27 லட்சம் செலவில் 64 நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகிப்பு இயந்திரங்கள் வழங்கல்

October 11, 2022 தண்டோரா குழு

கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையில், அரசுப் பள்ளிகளுக்கு ரூ .27 லட்சம் செலவில் 64 நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகிப்பு இயந்திரங்களை வழங்குகிறது.

கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள தன்னுடைய 16 கண் மருத்துவமனைகள் மூலம் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கண் மருத்துவ சேவையில் செயல்பட்டு வருகிறது.

தி ஐ ஃபவுண்டேஷன் அதன் தொண்டு நிறுவனமான நேத்ர ஜோதி அறக்கட்டளையின் கீழ் கோவையில், உள்ள ராஜலட்சுமி நேத்ராலயா மற்றும் திருப்பூரில் உள்ள திருமூர்த்தி நேத்ராலயா ஆகிய தொண்டு மருத்துவமனைகள் மூலம் ஏழைகளுக்கு இலவச கண் சிகிச்சை அளித்து சமூக சேவையில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளையின் கீழ், தி ஐ ஃபவுண்டேஷன் இலவச கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் விரிவான கண் சிகிச்சையை வழங்குவதற்காக பள்ளிகள்,கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இலவச கண் சிகிச்சை முகாம்களை தவறாமல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று, ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள மருத்துவமனை வளாகத்தில்,சமூக சேவை ஈடுபாட்டின் தொடர்ச்சியாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு குடிநீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படாத வகையில், குடிநீர் மூலம் பரவும் பெரும் தொற்று நோய்களைக் கருத்தில் கொண்டு, தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை ரூ.27 லட்சம் செலவில் குளிர்ந்த மற்றும் சாதாரண நீர் வசதிகொண்ட 64 நீர் சுத்திகரிப்பு மற்றும் விநியோகிப்பு இயந்திரங்களை,கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு இன்று வழங்கியது.

இதனை கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் வழங்கினார். இன்று வழங்கபட்ட இந்த இயந்திரங்களை, தி ஐ ஃபவுண்டேஷன் தனது சொந்த செலவில் அடுத்த 7 ஆண்டுகளுக்கு இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை பராமரிக்கும் பணியிலும் ஈடுபடும் எனவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் ஸ்ரேயாஸ் ராமமூர்த்தி, அரசு பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க