June 7, 2018
தண்டோரா குழு
விருத்தாச்சலம் அருகே அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் மருத்துவர் இல்லாத காரணத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் அருகே கம்மாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி மகாலட்சுமி(13).இன்று காலை வழக்கம் போல் பள்ளி சென்ற அவர்,பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றார்.அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.
மயங்கிய அவரை ஆசிரியர்கள் கம்மாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். ஆனால்,அங்கு மருத்துவர்கள் இல்லாத நிலையில், 30 நிமிடங்கள் உயிருக்கு போராடிய மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விருத்தாசலம் சேத்தியாத்தோப்பு சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.