• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இரோம் சர்மிளா

March 11, 2017 தண்டோரா குழு

மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்ததை தொடர்ந்து அரசியலிலிருந்து விலகுவதாக ‘மணிப்பூரின் இரும்புப் பெண்மணி’ என அழைக்கப்படும் இரோம் சர்மிளா அறிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் இருந்து சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போரட்டம் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு நடைபெறும் மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மாநில முதல்வர் ஓக்ராம் இபோபியை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்தார். தெளபால் தொகுதியில் மாநில முதல்வர் இபோபி தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றவர். அவரை எதிர்த்து இரோம் சர்மிளா இந்த முறை போட்டியிட்டார்.

இந்நிலையில், மணிப்பூர் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இதில், இரோம் சர்மிளா படுதோல்வி அடைந்தார். அவர் 100 ஓட்டுகள் கூட பெற முடியாமல், டெபாசிட்டை இழந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முதல்வர் இபோபி ஓக்ராம், இரோம் சர்மிளாவை விட 15,000 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில், படுதோல்வியைச் சந்தித்த இரோம் சர்மிளா அரசியலில் இருந்து விலகப் போவதாக சனிக்கிழமை மாலை அறிவித்துள்ளார். மக்களுக்காக 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தும், மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்ததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க