• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசியல் குறித்து கமல் பேசத் தகுதியானவர் – விஷால்

March 15, 2017 தண்டோரா குழு

“அரசியல் சூழ்நிலை குறித்து பேசுவதற்குக் கமல்ஹாசன் தகுதியானவர்தான்” என்று நடிகர் விஷால் கூறினார்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் உள்ளிட்டோர் கொண்ட “நம்ம அணி” சார்பாக கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில், விஷால், மிஷ்கின், ஞானவேல் ராஜா, பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டர்.

தயாரிப்பாளர்களின் நலனுக்காக 10 ஆண்டுகளாகக் குரல் கொடுத்து எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் இந்த அணி தற்போது போட்டியிடுகிறது என்றும் இது தொடர்பாக கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த தயாரிப்பாளர்களைச் சந்திக்க உள்ளதாகவும் விஷால் தெரிவித்தார்.

அப்போது, கமல் தொடர்ந்து அரசியல் சூழல் குறித்து பேசுவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த விஷால், “நடிகர் சமுதாயத்தில் முக்கியமான நபர். தனக்குத் தெரிந்த விஷயத்தைத் துணிச்சலுடன் வெளிப்படையாகக் கூறுபவர். சினிமாவைப் பற்றிப் பேசுவதற்கு கமலுக்கு என்ன தகுதி இருக்கிறதோ அந்த அளவிற்கு அரசியல் சூழல் குறித்தும் பேசுவதற்கும் அவருக்குத் தகுதி உள்ளது” என்று கூறினார்.

மேலும் படிக்க