• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசியல் கட்சியில் சேர்த்துவிட்டால் டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என இளைஞர்கள் நினைக்கிறார்கள் – தமிழிசை சவுந்தரராஜன்

October 19, 2019 தண்டோரா குழு

தமிழக முதல்வருக்கு நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ள நிலையில், அரசியல் கட்சியில் சேர்த்துவிட்டால் டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என இளைஞர்கள் நினைப்பதாக கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்லூரியின் நிறுவனர் தின விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

நான் தமிழகத்திற்கு என்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன், என்னை மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட பாசமிகு சசோதரி என்று அழைப்பதை தான் நான் அதிகம் விரும்புகிறேன். .அரசியல் கட்சியில் சேர்த்துவிட்டால் தானாக டாக்டர் பட்டம் பெற்றுவிடலாம் என இன்றைய இளைய தலைமுறையினர் நினைக்கிறார்கள். மேடையில் இருப்பவர்கள் கடின உழைப்பால் டாக்டர் பட்டம் பெற்றவர்கள். மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். குடும்ப வாழக்கை முக்கியதுவத்தையும் அன்பின் பறிமாற்றத்தின் முக்கிய துவத்தையும் இன்றைய இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், எனது உயரத்தை, நிறத்தை, முடியை கிண்டல் செய்தார்கள், இன்று நான் மேடையில் இருந்து கொண்டு அவர்களை கிண்டல் செய்கிறேன். எனவே தடைகளை தாண்டி குறிக்கோள் நோக்கி மாணவர்கள் எப்போதும் பயணிக்க வேண்டும்.சீன பிரதமர் வருகையின் போது பிரதமர் மோடி வேட்டி அணிந்து தமிழகத்தின் பெருமையை எடுத்துக்காட்டியது போல, தமிழ் மண்ணுக்கும் தெலுங்கானாவிற்கும் பாலமாக நான் இருப்பேன். தமிழகத்தில் என்னை அக்கா என்று அழைத்தது போல,தெலுங்கானாவிலும் என்னை அக்கா என்று தான் அழைக்கிறார்கள் எனக் கூறினார்.

மேலும் படிக்க