• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசியலுக்கு வந்த பின்னர் பல மிரட்டல்கள் வந்துள்ளது – கமல் பேட்டி

April 4, 2021 தண்டோரா குழு

அரசியலுக்கு வந்த பின்னர் பல மிரட்டல்கள் வந்துள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மநீம தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

தான் சம்பாதித்த பணத்தை தான் தேர்தலில் செலவு செய்துள்ளேன் எனத் தெரிவித்தார். செலவு கணக்குகளை நேர்மையாக காட்டியுள்ளதாகவும், அதற்காக அதிகாரிகளே பாராட்டியதாகவும் அவர் கூறினார். அரசியலுக்கு வந்த பின்னர் பல மிரட்டல்கள் வந்தன எனவும், எல்லாவற்றிக்கும் தயாராக தான் வந்துள்ளேன் எனவும் கூறிய அவர், எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காக தான் என முடிவு எடுத்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்த பின்னர், புதிய படங்களிலும் நடிப்பேன் எனவும், கூடுதலாக சம்பளம் வாங்கி மீண்டும் மக்களுக்கு செலவு செய்வேன் எனவும் அவர் தெரிவித்தார். அரசியலுக்கு இடைஞ்சல் எற்பட்டால் சினிமாவில் நடிப்பது நிறுத்தப்படும் எனவும், எனது அரசியல் பயணம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார். தனது முகவரி விரைவில் கோவைக்கு மாறும் எனவும், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் சொல்வது போல, தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடுவேன் என்பது நிஜமல்ல எனவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மேலும் படிக்க