March 30, 2020
தண்டோரா குழு
கொரோனா நோய் தொற்றை தவிர்க்க முறையாக சமூக இடைவெளியை பின்பற்றாத மீன்கடைகளை மூட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவித்தை தொடர்ந்து மீன் மார்கெட் மூடப்பட்டது.
உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளதைத்தைத்
தொடர்ந்து அத்திவசியப்பொருட்கள், இறைச்சி, மெடிக்கல் கடைகள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் பொருட்களை பெற்றுக்கொள்ள சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் கோவை உக்கடம் மீன்மார்கெட் பகுதியில் குவிந்த மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக மீன்களை வாங்கி சென்றனர்.
இதனைத்தொடர்ந்து மீன் மார்கெட்டை ஊரடங்கு உத்தரவு முடியும் வரை மீன்மார்கெட்டை திறக்ககூடாது என மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து உக்கடம் செல்வபுரம் சாலையில் இயங்கி வந்த மீன் மார்கெட் மூடப்பட்டது.