July 10, 2023
தண்டோரா குழு
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 330 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகிறது. இதில், தற்போது நடப்பாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடந்து வருகிறது. இதன் அரசு ஒதுக்கீட்டு சேர்க்கைக்கான ஒதுக்கீடு விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை லாகின் செய்து தெரிந்து கொள்ளலாம். பின்னர், சம்மந்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அசல் சான்றிதழடன் நேரில் சென்று கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். இதற்கு வரும் 12ம் தேதி கடைசி நாள் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.