திருச்செந்தூரில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவை பாஜக பெண் நிர்வாகி ஒரு கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது குமரி முதல் கோட்டை வரை நடை பயண பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், திருச்செந்துர் முருகன் கோவிலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு நோட்டீஸ் கொடுத்து கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு வந்த தூத்துக்குடி மாவட்ட பாஜக மகளிரணி தலைவர் நெல்லையம்மாள் நோட்டீஸ் கொடுப்பதை தடுத்தார். இதனால் அய்யாகண்ணவிற்கும் நெல்லையம்மாளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அய்யாகண்ணு பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்டுகிறது. இதனால் அந்த பெண் அய்யாகண்ணுவின் கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து இருத்தரப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த பெரியவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்