• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் -முதல்வர் யோகி ஆதித்யநாத்

March 21, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேசத்தில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்திரபிரதேச நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் சார்பாக யோகி ஆதித்யநாத் முதல்வராக பெறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், இன்று முதல்வர் ஆதித்யநாத் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ள அவர் இது தொடர்பான கட்டுமான பணிகளை விரிவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்னும் 7 முதல் 10 நாட்களில் சட்டரீதியிலான நடைமுறைகள் முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்பு பணிகள் தொடங்கப்பட்டு 18 மாதங்களில் மியூசியத்தின் பணிகளை முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா அயோத்தியாவுக்கு சென்று இடங்களை பார்வையிட்டு, ராமாயணம் மியூசியம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தார். பார்வையாளர்களை கவரும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு மியூசியம் அமைக்கப்படும் என்று அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார்.

தேர்தலின் போது சமாஜ்வாதி கட்சி அயோத்தியில் ராம்லீலா பூங்கா அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததை அடுத்து பாஜக தற்போது இந்த திட்டத்தை அறிவித்துள்ளது.

மேலும், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் அயோத்தி கோவில் பிரச்னை உணர்வுபூர்வமானது என்றும், அதனால் அனைத்து கட்சிகளும் கவனமுடன் கையாள வேண்டு்ம் என்றும் கூறியுள்ளது.

இதற்கு முன்பு இருந்த அகிலேஷ் யாதவ் அரசு ராமாயணம் மியூசியம் அமைக்க அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க