• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் !”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

November 9, 2019 தண்டோரா குழு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாள்தோறும் விசாரணை நடத்தியது. 40 நாள்கள் நடைபெற்ற விசாரணையின் இறுதியில், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.இந்நிலையில், நாடு முழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட்,அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஒரே கருத்தாக வழங்கியது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

* அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம்

* அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்

* 5 ஏக்கர் நிலத்தை வழங்க மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். 3 மாதத்தில் இந்த இடம் வழங்கப்பட வேண்டும்

* இஸ்லாமியர்கள் புதிய மசூதி கட்டிக்கொள்ள வக்போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும்.

* தீர்ப்பை 3 மாதத்தில் செயல்படுத்த வேண்டும்

* இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்பட வேண்டும்

* சர்ச்சைக்குரிய நிலத்தை 3 தரப்புக்கும் பிரித்து வழங்கி அலகபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதல்ல.

* பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுக்கு சொந்தமான பகுதி என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிருபிக்கவில்லை.

* அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும்

* நிலத்தின் உரிமையை நம்பிக்கை அடிப்படையில் முடிவு செய்ய முடியாது

* 1857-ம் ஆண்டுக்கு முன்பு வரை அந்த சர்ச்சைக்குரிய இடத்தின் உள்பகுதியில் இந்துக்கள் வழிபட தடை இல்லை

* அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 5 பேரும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

* சன்னி வக்போர்டுக்கு எதிராக ஷியா வக்போர்டு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

* ஒருவரின் நம்பிக்கை மற்றவரின் நம்பிக்கையை சீர்குலைக்கக் கூடாது.

* தொல்லியல் துறை அறிக்கையை நிராகரிக்க முடியாது.

* நிர்மோகி அகாராவின் வாதம் ஏற்புடையதாக இல்லை.

* காலியிடத்தில் மசூதி கட்டப்படவில்லை.

* அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பது இந்துக்களின் நம்பிக்கை

* அந்த இடம் பாபர் மசூதி என்பது இஸ்லாமியர்களின் வாதம்

* பாபர் மசூதி கட்டப்படும் முன்பு அங்கிருந்த இடம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல

* ஆவணங்களின்படி அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது

* நடுநிலையைக் காக்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கு உள்ளது

மேலும் படிக்க