February 24, 2018
தண்டோரா குழு
மகளிருக்கான மானிய அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்கப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சென்னை மற்றும் புதுவையில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அம்மா ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கிவைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.
விமான நிலையத்திலிருந்து, ஹெலிகாப்டர் மூலம் காமராஜர் சாலையில் உள்ள ஐ.என்.எஸ். ஹெலிகாப்டர் தளத்துக்கு மோடி செல்கிறார். இதன்பிறகு கார் மூலம் கலைவாணர் அரங்கத்துக்கு செல்கிறார். கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.