• Download mobile app
28 Feb 2026, SaturdayEdition - 3671
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அம்மா கட்சி தொடங்கினார் கராத்தே ஹுசைனி

December 24, 2016 தண்டோரா குழு

பிரபல தற்காப்புக்கலை வல்லுநரான ஷிஹா் ஹுசைனி ‘அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கர்நாடக சிறையில் இருந்தபோது அவர் விடுதலையாக வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டார் தற்காப்புக் கலைஞரான ஹுசைனி. இதன் மூலம் அதிமுக வட்டாரத்தில் அக்கட்சியின் உண்மை விசுவாசியாக பாராட்டப்பட்டார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சி விவகாரத்தில் எதிலும் தலையிடாமல் ஈடுபாடமல் இருந்த ஹுசைனி, தற்போது “அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு” (AMMA) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக ஹுசைனி மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்தார். அதன் பின்னர் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஹூசைனி கூறுகையில், “ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழகத்தில் மோசமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. எனவே அதை மாற்றும் வகையில்தான் நான் அரசியலில் குதிக்கும் முடிவை எடுத்துள்ளேன். நான் என்றுமே ஜெயலலிதாவின் ரசிகன், தொண்டன், விசுவாசிதான்.

மேலும், வெங்கையா நாயுடு எனக்கு 15 ஆண்டு கால நண்பர். கட்சி குறித்து விவாதிப்பதற்காக அவரைச் சந்திக்கவில்லை. ஆனால், கட்சி தொடங்குவதற்கு அவரிடம் வாழ்த்து பெற்றேன்” என்றார்.

மேலும் படிக்க