• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அம்மாவின் நாற்காலியில் உட்கார்ந்த உடன் தன்னை அம்மாவாகவே நினைத்து கொண்டுள்ளார் முதல்வர் – டிடிவி தினகரன்

April 2, 2019 தண்டோரா குழு

அம்மாவின் நாற்காலியில் உட்கார்ந்த உடன் தன்னை அம்மாவாகவே நினைத்து கொண்டுள்ளார் முதல்வர் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கான அமமுக வேட்பாளர் அப்பாதுரையை ஆதரித்து அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

ஆட்சி எப்படி நடக்க கூடாது என்பதற்கு உதாரணமாக எடப்பாடி ஆட்சி நடைபெறுகிறது. மோடியால் தமிழக ஆட்சி பாதுகாக்கப்படுகிறது. இனி மோடி அல்ல அவரது டாடியே வந்தாலும் தமிழக அதிமுக ஆட்சியை பாதுகாக்க முடியாது. காரணம் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலும் தேர்தலும் வந்து விட்டது.18 தொகுதிகளில் 8 தொகுதியிலாவது பெற்றி பெற முடியவில்லை என்றால் ஆட்சி முடிந்துவிடும். நம்மால் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் பழனிசாமி கழக தொண்டர்களுக்கும் கழகத்திற்கும் துரோகம் செய்து விட்டு தமிழக நலன்களை மோடி காலில் அடகு வைத்து விட்டார். மடியில் கனம் உள்ளதால் மோடியிடம் கைகட்டி மண்டியிட்டுள்ளனர். என்னென்னமோ பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றி விடலாம் என எண்ணி வருகிறார்கள். தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியுடன் இவர்கள் வைத்தது தான் மெகா கூட்டணியா? அம்மாவிற்கு நினைவு மண்டம் கட்ட கூடாது என்ற ராமதாஸ் மற்றும் விஜயகாந்த் உடன் வைத்தது தான் மெகா கூட்டனியா என கேள்வி எழுப்பினார்.

மேலும், அதிமுகவின் தொண்டர்கள் எல்லாம் அமமுகவுடன் இருக்கிறார்கள். முதல்வர் துணை முதல்வர் எல்லாம் காவல்துறை பாதுகாப்புடன் வருகிறார்கள். நம்மை போல் பாதுகாப்பின்றி வர தயங்குகிறார்கள். நாம் தொண்டர்களையும் மக்களையும் நம்பி தேர்தலில் நிற்கிறோம். அவர்கள் பணத்தை நம்பி மட்டுமே நிற்கிறார்கள். இவர்கள் ஒரு புறம் என்றால் மற்றொன்று பயில்வான் கூட்டனி என்று சொல்கிறார்கள்.அங்கு ஒற்றுமையில்லை ராகுலை பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் மம்தா அதனை எதிர்கிறார். தமிழகத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் பத்து ஆண்டுகள் ஆட்சி செய்ததை மறந்து விட்டார்கள். இப்போது தமிழக மக்கள் நலனுக்காக கூட்டனி என கூறுகிறார்கள்.
நல்ல ஆட்சி மக்கள் விரும்புகிற ஆட்சி கொண்டு வர வேண்டுமென்றால் அமமுக விற்கு வாக்களிக்க வேண்டும். நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் இடத்தில் மக்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். பழனிசாமி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி கெட்டுள்ளது என அனைவருக்கும் தெரியும். துடியலூர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி யார் என்பதே தெரியாமல் உள்ளது. ஆனால் முதல்வருக்கு பாதுகாப்புக்கு போயே காவல்துறை சோர்ந்து போய் விட்டார்கள். அம்மாவின் நாற்காலியில் உட்கார்ந்த உடன் தன்னை அம்மாவாகவே நினைத்து கொண்டுள்ளார் முதல்வர். திமுக காங்கிரஸ் கூட்டனியிலேயே கொள்கை இல்லாதவர்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறு வேறு கொள்கை கொண்டவர்கள் தமிழக நலனுக்காக இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் எனவும் கேள்வியெழுப்பினார்.

மேலும் படிக்க