February 5, 2018
தண்டோரா குழு
மாயூரநாதர் கோவிலில் உள்ள அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த குருக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் அருள்பாளிக்கும் அபயாம்பிகை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் சந்தன காப்பு அலங்காரம் நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்து பூஜை செய்ததை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து திருவாடுதுறை ஆதீனம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியிருந்தனர்.இந்நிலையில் அபயாம்பிகை அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்த ராஜ் குருக்கள் உள்ளிட்ட இருவரை பணிநீக்கம் செய்து திருவாவடுதுறை ஆதீனம் உத்தரவிட்டார்.