April 14, 2018
தண்டோரா குழு
அம்பேத்கரின் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதே போல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழ் இருந்த அம்பேத்கரின் உருவ படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி,மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினர்.
மேலும்,சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்,முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.