• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைப்புசாரா ஓய்வூதியதாரர்கள் வரும் 30ம் தேதிக்குள் ஆயுள் சான்று அளிக்க வேண்டும்

April 2, 2022 தண்டோரா குழு

கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் பாலதண்டாயுதம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா உடலுழைப்பு நலவாரியத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் வரும் 2022-2023ம் ஆண்டிற்கான ஆயுள் சான்று அளிக்க வேண்டும். இச்சான்றினை வரும் 30ம் தேதிக்குள் அனைத்து அரசு அலுவலக வேலை நாட்களிலும், காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை தங்களது தற்போதைய பாஸ்போட் அளவுள்ள புகைப்படம்-ஒட்டிய பூர்த்தி செய்யப்பட்ட உரிய ஆயுள் சான்று படிவத்துடன்,ஆதார் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகிய ஆவணங்களுடன் கோவை ராமநாதபுரத்தில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆயுள் சான்று அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் இது தொடர்பான ஏதேனும் விவரங்கள் பெற 0422-2324988 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க