• Download mobile app
24 Oct 2025, FridayEdition - 3544
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவாரா ?

April 10, 2017 தண்டோரா குழு

வருமானவரித் துறையினரால் சோதனை செய்த விவகாரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அ.தி.மு.க.,வின் முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகினர்.

சென்னை ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா நடைபெற்ற புகாரை அடுத்து ஏப்ரல் 7-ம் தேதி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் , எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, அ.தி.மு.க முன்னாள் எம்.பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோரின் வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல ஆவணங்கள், முறைகேடாக பணபரிமாற்றம் செய்யப்பட்டதிற்கான ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை வருமானவரித் துறையினர் கைப்பற்றினார்கள் என தகவல் வெளியானது. இதனையடுத்து விஜயபாஸ்கர், சரத்குமார், கீதாலட்சுமி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் இன்று (ஏப்ரல் 10) சென்னை, நுங்கபாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர்.

ஆஜரான அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடைபெற்று வரும் இந்த விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவரிடம் இருந்து கைப்பற்றபட்ட ஆவணங்களை வைத்து அவரை கைது செய்ய முடியாது என சட்ட வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க