• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து கோரிக்கை மனு அளித்த மஜக நிர்வாகிகள்

September 2, 2021 தண்டோரா குழு

மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் இன்று கிரீன்வேஸ் சாலையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இல்லத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சந்தித்து தமிழக மாணவர்களின் நலன் குறித்தான கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாதவர்கள் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெறமாட்டார்கள் எனவும், மேலும் பள்ளிக் கட்டணத்தை செலுத்தாதவர்களும் அதே வகுப்பில் தான் தொடர வேண்டும் என்றும் பல்வேறு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா சூழலைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு ஆல் பாஸ் என அறிவித்தபோதும் தனியார் பள்ளிகளின் இது போன்ற நடவடிக்கைகள் மாணவர்களையும், பெற்றோர்களையும் வஞ்சிக்கும் விதமாக உள்ளது.

ஆகவே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இவ்விசயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் IKP மாநில செயலாளர் இசாக், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், திருச்சி மாவட்ட செயலாளர் பேரா. மைதீன், கோவை மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், துணை செயலாளர்கள் ATR.பதுருதீன், சிங்கை சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க