April 18, 2018
தண்டோரா குழு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவியான பார்பரா புஷ் (92) நேற்று மாலை காலமானார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுள்யூ புஷ்சின் மனைவியான பார்பரா புஷ் (92) நேற்று மாலை ஹூஸ்டனில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
பார்பரா புஷ் முதுமையின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது.மேலும் அந்த அறிக்கையில்,உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,பார்பரா புஷ் 92 வயதில் நேற்று காலமானதாக அவரது குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இவர் அமெரிக்காவின் 43வது அதிபரான ஜார்ஜ் வாக்கர் புஷ்சின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.