• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்கா மீது வட கொரியா தாக்குதல் நடத்த முடியாது – டொனால்ட் டிரம்ப்

January 3, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவைத் தாக்கும் அளவுக்கு வடகொரியாவால் அணு ஆயுதத்தையெல்லாம் தயாரிக்க முடியாது. அதன் தாக்குதல் திட்டம் எதுவும் நிறைவேறாது என்று அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் கூறினார்.

வட கொரியா அதிபர் கிம் ஜங்-யுன் புத்தாண்டு உரையில், “வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைத் தயாரித்து வருகிறது. அமெரிக்க நாட்டையும் தாக்கும் வல்லமை உடையது. விரைவில் அந்த ஏவுகணையைச் சோதித்துப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதில் தரும் வகையில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில் கூறியதாவது:

அமெரிக்க நாட்டைத் கூட தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையைத் தயாரித்து வருவதாக வட கொரிய அதிபர் கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அந்த எண்ணம் கண்டிப்பாக நிறைவேறாது. சீனா அமெரிக்காவின் மூலம் ஏராளமான வர்த்தக பயன்களைப் பெற்றிருக்கிறது. எனவே, வட கொரியாவுக்கு அந்நாடு எந்த உதவியும் செய்யாது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொரியா ஆறு முறை செயல்படுத்தியுள்ளது. ஆனாலும், வட கொரியாவின் சோதனைகள் துல்லியமாகச் செயல்பட முடியவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க