• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் பாம்பு பிடிக்கும் தமிழர்களுக்கு ரூ.47 லட்சம்) சம்பளம்

January 28, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் மலைப்பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளத்தால் அவற்றை பிடிக்கும் பணியில் தமிழகத்தின் இருளர் பழங்குடியினரை சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு 68 ஆயிரத்து 888 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46 லட்சத்து 84 ஆயிரம்) சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் பர்மீஸ் பைதான்கள் எனப்படும் மலைப்பாம்புகள் அதிகரித்த காரணத்தால் பல உயிரினங்கள் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தடுப்பதற்காக தமிழகத்தில் வசிக்கும் இருளர் சமூகத்தைச் சேர்ந்த மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் ஆகியோரை பாம்பு பிடிக்க அமெரிக்க அரசு புளோரிடா மாகாணத்திற்கு வரவழைத்துள்ளது. அவர்களுடன் இரு மொழி பெயர்ப்பாளர்களும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் கடந்த ஒரு வாரத்தில், 13 பர்மீஸ் மலைபாம்புகளை பிடித்துள்ளனர். அதில் ஒன்று 16 அடி நீள பெண் மலைப்பாம்பு ஆகும். இவற்றில் 4 பாம்புகளை, முதலை ஏரி தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து பிடித்து அகற்றினார்கள்.

மேலும் படிக்க