• Download mobile app
09 Jul 2025, WednesdayEdition - 3437
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமெரிக்காவில் ஜூஸ் விற்று சகோதரன் உயிரை காப்பாற்றிய 9 வயது சிறுவன்

June 1, 2018 தண்டோரா குழு

அமெரிக்காவில் 9 வயது சிறுவன் தன் தம்பியின் மருத்துவச் செலவுக்காக ஜூஸ் மற்றும் டி-ஷர்ட் விற்பனை செய்து 4 லட்சம் ரூபாய் சம்பதிதுள்ளான்.

அமெரிக்கா கலிபோர்னியா கிரின்வுட் பகுதியை சேர்ந்த மெலிஸ்சா மேட் தம்பதியருக்கு ஆண்ட்ரூ மெரி என்ற மகன் இருக்கிறான்.சமீபத்தில் இந்த தமப்தியருக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது.ஆனால் பிறந்த நாள் முதலே அந்த குழந்தை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது.இதனையடுத்து சிகிச்சைக்காக அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,குழந்தை சிகிச்சைக்கான மருத்துவ பில்லை கட்ட முடியாமல் பெற்றோர் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.இதனைக் கண்ட ஆண்ட்ரூ மெரி, தம்பியின் மருத்துவ செலவுக்காக பணம் திரட்ட முடிவு செய்தான்.இதற்காக வித்தியாசமாக எலும்மிச்சை பழ ஜூஸ் தயாரித்து அதை அமெரிக்காவில் உள்ள நெடுஞ்சாலையில் வைத்து விற்பனை செய்தான் அத்துடன் தம்பியின் பெயர் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்களையும் விற்பனை செய்தான்.இதன் மூலம் 2 மணி நேரத்தில் 4 லட்சம் ரூபாய் பணத்தை சம்பாதித்து,அந்த பணத்தை தம்பியின் மருத்துவ செலவுக்கு பயன்படுத்தியுள்ளான். ஆண்ட்ரூ மெரியின் இந்த செயலைக் கண்டு அனைவரும் வியந்தனர்.

மேலும் படிக்க