• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் கல்வி விழிப்புணர்வுக்காக தமிழ்ச் சிறுமியைத் தேர்ந்தெடுத்த ஒபாமா மனைவி

January 7, 2017 தண்டோரா குழு

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா கல்வி விழிப்புணர்வு பிரசாரத்திற்காகத் தமிழ் வம்சாவளி சிறுமியைத் தேர்வு செய்துள்ளார்.

அமெரிக்காவில் இளம் தலைமுறையினரிடையே கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுப்பட்டுவருகிறார். இந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்காக அவர் தமிழ் வம்சாவளி சிறுமி உட்பட 17 பேரைத் தேர்வு செய்துள்ளார்.

மிச்சேல் ஒபாமா தேர்வு செய்த தமிழ் சிறுமியின் பெயர் ஸ்வேதா பிரபாகரன் (16). இவரது பெற்றொரின் பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் ஆகும். ஸ்வேதாவின் பெற்றொர்கள் 1998-ல் அமெரிக்காவில் குடியேறினார்கள்.

மிச்சேல் ஒபாமா தேர்வு செய்த 17 பேரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஸ்வேதா மட்டுமே. ஸ்வேதா இளையவர்களுக்கு கணிணி அறிவியல் கற்றுதருவதில் சிறந்தவராக இருந்ததால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க