January 20, 2018
தண்டோரா குழு
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியான மனிஷா சிங் பொருளாதாரம் மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான உதவி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் இந்திய வம்சவாளியான மனிஷா சிங்,டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான உதவிசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க குடியரசு தலைவர் நிர்வாகத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை அவரையே சாரும்.
இந்தியாவில் பிறந்த மனிஷா சிங், குடியரசுக் கட்சி தலைவர் டான் சல்லிவனின் வழக்கறிஞராகவும் கொள்கை ஆலோசகவும் இருந்தார். அமெரிக்காவின் முன்னாள் குடியரசு தலைவர் ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தின் பொருளாதாரப் பணியகத்தில் மாநில துணை உதவி செயலராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.