• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அமிர்தாஞ்சனின் வலி நிவாரணத் தயாரிப்புகளின் விளம்பரத் தூதர்களாக ஒலிம்பிக் சாம்பியன்களான மீராபாய் சானு மற்றும் பஜ்ரங் புனியா நியமனம் !

October 9, 2021 தண்டோரா குழு

இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியன்களான மீராபாய் சானு மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் அமிர்தாஞ்சனின் வலி நிவாரணத் தயாரிப்புகளின் விளம்பரத் தூதர்களாக செயல்படுகின்றனர்.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு மற்றும் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா ஆகியோருடன், பாரம்பரியம் மிக்க இந்தியாவின் சுகாதாரத் துறையில் முன்னோடியாகத் திகழும் 128 ஆண்டு நிறுவனமான அமிர்தாஞ்சன் ஹெல்த்கேர் நிறுவனம் பிராண்ட் தூதர்களாக செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒலிம்பிக் வீரர்கள் முதுகுவலி ரோல்-ஆன், மூட்டு தசை ஸ்ப்ரே மற்றும் வலி நிவாரணி போன்றவற்றை உள்ளடக்கிய மேம்பட்ட உடல் வலி நீக்கும் அமிர்தாஞ்சனின் தயாரிப்புகளுக்கு விளம்பரத் தூதர்களாக செயல்பட்டு நிறுவனத்தின் தயாரிப்புகளை மேலும் பிரபலப்படுத்துவார்கள்.

உயர்தர விளையாட்டு வீரர்களான, இந்த இரண்டு விளையாட்டு வீரர்களும் உலகளாவிய தளத்தில் இந்தியாவிற்கு பெரும் கவுரவத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். ஆனால் விளையாட்டில் வெற்றி பெறுவதற்கான பாதை எளிதானதல்ல. இந்த வீரர்கள் வலி, கஷ்டம் மற்றும் சவால்களைக் கடந்து விளையாட்டில் வெல்ல வேண்டியிருந்தது.

1893-ம் ஆண்டு முதல் அமிர்தாஞ்சன், வலி மேலாண்மையில் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. பல கோடிக்கணக்கான இந்தியர்களின் வலியை நீக்க உதவியுள்ளது. தற்போது, இந்த கூட்டுச் செயல்பாட்டின் மூலம், இந்த விளையாட்டு வீரர்களின் வெற்றி வரலாறுகள் மட்டுமல்லாமல் அவர்களின் கஷ்டங்களையும் விவரிக்கப்படும். இதன் மூலம் வலி நிவாரணத் தயாரிப்புகள் முன்னிலைப்படுத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்படும்.

கூட்டு செயல்பாட்டின் ஒரு பகுதியாக, அமிர்தாஞ்சனின் மேம்பட்ட முதுகு வலி ரோல்-ஆன், மூட்டு தசை ஸ்ப்ரே மற்றும் வலி நிவாரணிக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் விளம்பரங்கள் உள்ளிட்ட தொடர் விளம்பரங்களில் இந்த இரு விளையாட்டு வீரர்களும் பிராண்ட் தூதர்களாக இடம்பெறுவார்கள். இந்த தயாரிப்புகள் அனைத்தும் ஆரோக்கியம், அறிவியல் மற்றும் இயற்கையின் தனித்துவமான கலவை என்பதுடன் ஆயுர்வேதத்தின் வேர்களை வலுவான அடிப்படையாகக் கொண்டவையாகும்.

மேலும் இந்த இரண்டு விளையாட்டுவீரர்களும் நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு திட்டங்கள் போன்ற பல்வேறு முன்முயற்சிகளில் தோன்றுவார்கள்.

இது குறித்து அமிர்தாஞ்சன் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எஸ். சாம்பு பிரசாத், கூறுகையில்,

அமிர்தாஞ்சன் எப்போதும் வலி நிவாரணத் தயாரிப்புகளில் முன்னோடியாக உள்ளது. மேலும் பல ஆண்டுகளாக வலி நிவாரணத்திற்கான இந்தியாவின் நம்பகமான தேர்வாகவும் திகழ்ந்து வருகிறது. ஒரு நிறுவனமாக, எங்கள் புதுமையான தயாரிப்புகள் மூலம் நுகர்வோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நாங்கள் எப்போதும் பாடுபடுகிறோம். அறிவியலை ஆயுர்வேதத்தின் இயற்கையுடன் இணைப்பதில் எங்கள் நிபுணத்துவத்தை செயல்படுத்துகிறோம்.

நாங்கள் இந்தப் பணியை 1893-ம் ஆண்டு முதல் மேற்கொள்கிறோம். எங்கள் நுகர்வோர் தேடும் வலி நிவாரணத்தை வழங்குவதில் எங்கள் தயாரிப்புகள் திறன்மிக்கவையாக உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளன. ஒருவருடைய தனிப்பட்ட ஆரோக்கியத்தில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும், சுற்றுச்சூழலில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் டைக்ளொஃபெனாக் போன்ற சிந்தெடிக் கெமிகல்களை பயன்படுத்துவதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளோம்.

அமிர்தாஞ்சன் நிறுவனம் இப்போது தனது பிரிவுகளை மேலும் வளர்ச்சி அடையச் செய்வதில் கவனம் செலுத்துகிறது. இது விஞ்ஞான மருத்துவ பரிசோதனைகளின் ஆதரவுடன் செயல்திறன் அடிப்படையிலான ஆதாரங்களுடன் கூடிய மிக உயர்ந்த வலி நிவாரணத் தயாரிப்புகளை வழங்குகிறது. பெருமைமிக்க இந்திய பிராண்டாக, உள்ள நாங்கள் ஒலிம்பிக் சாம்பியன்களை எங்கள் பிராண்ட் தூதர்களாக ஒப்பந்தம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உலகளாவிய தளத்தில் நம் நாட்டிற்கு வெற்றியைப் பெற்றுத் தர அவர்கள் மிகப்பெரிய சிக்கல்களை எதிர் கொண்டுள்ளனர். அவர்களை தூதர்களாக கொண்டு செயல்படுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.” என்றார்.

அமிர்தாஞ்சன் ஹெல்த்கேர் லிமிடெட் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி மணி பகவதீஸ்வரன் கூறுகையில்,

மீராபாய், மற்றும் பஜ்ரங் ஆகியோர் எதிர்கால தலைமுறையினருக்கு முன்மாதிரியாகவும், இளைஞர்களின் அடையாளச் சின்னங்களாகவும் உருவெடுத்துள்ளனர். வலி அல்லது பின்னடைவுகள் இருந்தபோதிலும் அவர்கள் ஒருபோதும் இலக்குகளைக் கைவிடாமல் செயல்படுபவர்கள் என்ற உத்வேக உணர்வை அவர்கள் கொண்டுள்ளனர், அது எங்கள் பிராண்ட் எதிரொலிக்கும் தத்துவம் ஆகும். இந்த ஒத்துழைப்பு மற்றும் விளையாட்டு வீரர்களின் அனுபவங்கள் மூலம் வலியை வெற்றி கொள்ள முடியும் என்ற உண்மையை நாங்கள் மக்களுக்கு முதன்மையாகத் தெரிவிக்க விரும்புகிறோம். வலி உங்கள் கனவுகளை அடைவதைத் தடுக்கக்கூடாது என்பதை எடுத்துச் சொல்ல விரும்புகிறோம். என்றார்.

மீராபாய் சானு கூறுகையில்,

அமிர்தாஞ்சனின் வலி நிவாரணத் தயாரிப்புகள் பிரிவை பிரபலப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு தடகள வீராங்கனையாக, நாம் உடல் வலியைத் தாங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற சூழல் உள்ளது. ஆனால் தொடர்ந்து செயல்பட வேண்டும். வலி தாங்கமுடியாமல் இருந்த நாட்களில், அமிர்தாஞ்சனின் முதுகு வலி ரோல்-ஆன் போன்ற தயாரிப்புகள் எனக்கு நிவாரணம் அளித்தது. இது உடனடி மற்றும் நீடித்த நிவாரணம் அளிக்கும் வகையில் உள்ள ஹாட் ஆக் ஷன்’ ஹீட் தெரபியின் முறையில் 30 வினாடிகளுக்குள் வேலை செய்யத் தொடங்குகிறது. என்றார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பஜ்ரங் புனியா,

அதிக செயல்பாடுகள் கொண்ட விளையாட்டு வீரராக உள்ள நான் எப்போதுமே எனது போட்டியை எளிதாக்கக்கூடிய எந்த சூழலையும் தேடிக்கொண்டிருக்கிறேன். அமிர்தாஞ்சனின் இணைப்புத் தசை ஸ்ப்ரேயை பயன்படுத்தி மூட்டு, தசை மற்றும் ஒட்டுமொத்த உடல் வலியை தீர்த்துக் கொள்வதை எதிர் நோக்கியுள்ளேன். மேலும், மல்யுத்தம் போன்ற சண்டை விளையாட்டுகளில் விளையாட்டு வீரர்களுக்கு, மீட்பு என்பது உச்ச செயல்திறனைப் போலவே மிக முக்கியமானது. இந்த ஸ்ப்ரேயைப் பயன்படுத்தும்போது அது பாதிக்கப்பட்ட தசையை அடைந்து வலியை உடனடியாக நிறுத்துகிறது. தீவிர பயிற்சி அமர்வுக்குப் பிறகு அல்லது போட்டி இடைவெளிகளுக்கு இடையில் உடலை விரைவாக வலியில் இருந்து மீட்க இது உதவும்.” என்றார்.

மேலும் படிக்க