July 6, 2018
தண்டோரா குழு
சினிமா துறையின் பிரபலங்களுக்கு தான் இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் மதிப்பு.சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான ட்ரெண்டிங் விவாதங்கள் சினிமாவை பற்றித்தான் இருக்கும்.
அந்த வகையில்,பாலிவுட்டில் “ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை” படத்தின் மூலம் அறிமுகமான பிரியங்கா சோப்ரா முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தற்போது குவாண்டிகோ எனும் ஆங்கில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் டாப்பில் இருக்கும் இந்திய பிரபலம் யார் தெரியுமா? பிரியங்கா சோப்ரா தான்.கோடிக்கணக்கில் ரசிகர்களை கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ராவை இதுவரை 2.5 கோடி ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர்.
இதன் மூலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி,பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன்,சல்மான் கான் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்துள்ளார்.இதற்காக தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு பிரியங்கா சோப்ரா நன்றி தெரிவித்து உள்ளார்.
அதிகம் பாலோவர் வைத்துள்ள பிரபலங்கள் வருமாறு:-
பிரியங்கா சோப்ரா – 2.5 கோடி
தீபிகா படுகோன் – 2.49 கோடி
விராட் கோலி – 2.27 கோடி
சல்மான் கான் – 1.73 கோடி
நரேந்திர மோடி – 1.35 கோடி
ஷாருக்கான் – 1.33 கோடி
அமிதாபச்சன் – 95 லட்சம்