• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அப்போலோ மருத்துவமனையில்ரோபோடிக் மற்றும் டிஏவிஐ நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இதய நோய் அறுவை சிகிச்சை

October 19, 2024 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ரோபோடிக் மற்றும் டிஏவிஐ தொழில்நுட்பத்துடன் இதய நோய் அறுவை சிகிச்சை செய்வது குறித்து அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் செங்கோட்டுவேலு,எம்.எம் யூசுப் ஆகியோர் கூறியதாவது:-

இந்த சிகிச்சை மூலமாக வயதானவர்களுக்கு இதய வால்வ் பிரச்சனையை ஏற்பட்டால் அவர்களை தொடை மூலமாக ஊசி செலுத்தி அதனை சரி செய்ய முடியும்.ரோபோடிக் மற்றும் டிஏவிஐ தொழில்நுட்பம் மூலமாக நோயாளிக்கு எந்த விதமான சிகிச்சை அளிக்க முடியும் என்று ஆராய்ச்சி செய்த பிறகு சிகிச்சை அளிக்கப்படும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த நபர்களுக்கு கூட இந்த சிகிச்சை செய்ய முடியும் சிகிச்சை செய்து அடுத்த நாட்களே சாதனமாக செயல்படுவார்கள்.

முன்பு அறுவை சிகிச்சை செய்யும் போது நெஞ்சு எலும்பை திறந்து தான் அறுவை சிகிச்சை செய்ய முடியும் ஆனால் தற்பொழுது இந்த தொழில்நுட்பம் மூலமாக இதயத்திற்கு கீழே ஒரு துளையிட்டு 5 சென்டி மீட்டர் திறந்து எளிதாக அறுவை செய்ய முடியும்.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் படிக்க