• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அபூதாகீர் மீதான சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு ஒத்திவைப்பு

March 27, 2017 தண்டோரா குழு

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அபுதாகீரை சிபிசிஐடி காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்து முன்னணி பிரமுகர் சசி குமார் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சையது அபுதாகீரை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கடந்த 22 ஆம் தேதி கைது செய்து,கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.

சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள கடந்த வெள்ளியன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அம்மனு மீதான விசாரணை மேற்கொள்ள ,அபுதாகீர் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

சி.பி.சி.ஐ.டி காவலில் வைத்து விசாரிக்க தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடைபெற்றது. சி.பி.சி.ஐ.டி காவலில் வைத்து விசாரணை செய்ய அபுதாகீர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து விசாரணை நாளை ஒத்தி வைத்து நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டார் .

மேலும் படிக்க