• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அன்று எதிரெதிர் துருவங்கள் இன்று நண்பர்கள் – இருவரும் இணைந்த சுவாரஸ்யம்

September 9, 2019 தண்டோரா குழு

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின் 2002-ம் ஆண்டு குஜராத் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.இந்த கலவரத்தின் கோரத்தை இந்தியா முழுவதிலும் வெளிப்படுத்தியது 2 புகைப்படங்கள் தான். அதில் ஒன்று உயிர்ப் பிச்சை கேட்டு இளைஞர் ஒருவர் கெஞ்சுவது போன்ற படம். இந்த புகைப்படம் பார்ப்பவர்களை உருகவைத்தது.அந்தப் புகைப்படத்தில் இருந்த இளைஞரின் பெயர் குத்புதின் அன்சாரி. மற்றொரு புகைப்படத்தில் கையில் வாளுடன் ஆவேசமாக நிற்கும் நபர். அவரது பெயர் அஷோக் பார்மர் என்கிற மோச்சி.இந்த இரு புகைப்படங்கள் அன்றை நாளில் பெரிதும் பேசபட்டது.

இந்த சூழலில் கலவரத்தில் ஈடுபட்டதால் அஷோக் பார்மர் அனைத்தையும் இழந்து, வீடின்றி நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டது. வழக்கில் சிக்கிய அவரை 2005-ல் நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் குஜராத் அரசு செய்த மேல்முறையீடு காரணமாக அவர் 2014-ம் ஆண்டுவரை வழக்கைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தனது வருமானம் அனைத்தையும் இழந்த மோச்சி திருமணமே செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. காலங்கள் கடந்தன வறுமை அவருக்குப் பல விஷயங்களை உணர்த்தின.அது இந்தியாவில் அனைவருக்கும் இடம் உண்டு, அனைவரும் இந்திய மக்களே, வேற்றுமையில் ஒற்றுமை, மதத்துவேஷம் கூடாது என்பது தான்.

இதற்கிடையில், இடைப்பட்ட காலத்தில் தலித் – இஸ்லாமிய ஒற்றுமைக்காகப்பாடுபடும் இயக்கத்தில் இணைந்த மோச்சி தான் செய்த கொடுமைகளுக்காகப் பகிரங்க மன்னிப்பு கேட்டார். மோச்சியின் பரிதாப நிலையை அறிந்த கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு செருப்புக் கடை வைக்க நிதியை அளித்துள்ளது. கடந்த வாரம் டெல்லி தர்வாஜா ஏரியாவில் மோச்சி செருப்புக் கடை திறந்தார்.அந்த கடையை திறந்து வைத்தவர் யார் தெரியுமா? கலவரத்தில் பாதிக்கப்பட்ட தையல் தொழிலாளி அன்வர் தான். அந்தக் கடையின் பெயர் (ஏக்தா சப்பல் கர்) ஒற்றுமை செருப்புக் கடை.

எனது நண்பர் மோச்சிக்காக பிரார்த்திப்பேன். அவர் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் இனி நன்றாக இருப்பார். நாங்கள் இருவரும் கடினமான நாட்களைக் கடந்து வந்துள்ளோம் என கடையைத் திறந்து வைத்த பின் குத்புதீன் அன்வர் பேசியுள்ளார்.
இது என் வாழ்க்கையின் மிகப்பெரிய நிகழ்வு, எனக்கென்று ஒரு வீடுகூட இல்லை. ஆனால் இந்தப் புதிய வாழ்க்கை அதை எனக்குப் பெற்றுத்தரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது’’ என்று மோச்சி கூறியுள்ளார்.

வேற்றுமையில் ஒன்று என்ற இந்தியாவின் தாராக மந்திரத்திற்கு ஏற்ப 2 மதங்களை மனிதநேயம் வென்ற நெகிழ்ச்சியான நிகழ்வாக அன்வர் மற்றும் மோச்சியின் வாழ்க்கை உள்ளது.

மேலும் படிக்க