அலையன்ஸ் கிளப் கோயம்புத்தூர் அன்பு மாவட்டம் 250 எஸ் சார்பாக அன்பு முகில் அறக்கட்டளை துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் சேவை திட்டம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அலையன்ஸ் கிளப் கோவை மாவட்ட ஆளுநர் ஸ்ரீனிவாச கிரி மற்றும் மண்டல தலைவர் பிரியா எஸ் கிரி ஆகியோர் கலந்து கொண்டு அன்பு முகில் அறக்கட்டளையை துவக்கி வைத்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக சுந்தராபுரம் விஏஓ எம் விஜயகுமார், இன்டர்நேஷனல் டைரக்டர் டி எஸ் விஜயகுமார், சவுத் மல்டிபிள் கவுன்சில் செக்ரெட்டரி ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சேவை திட்டத்தை முதல் துணை மாவட்ட ஆளுநர் ராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த சேவை திட்டத்தில், ஏழை எளிய மக்கள்,முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இதில் வீல் சேர்,தையல் மிஷின், கேஸ் ஸ்டவ், மின்விசிறி,வெட் கிரைண்டர் வாஷிங் மெஷின் எடை கருவிகள் பள்ளி மாணவர்களுக்கான நோட் புத்தகங்கள் கல்வி உதவித்தொகை மளிகை பொருட்கள் பெண்களுக்கான சாரீஸ் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து 150 மேற்பட்டோருக்கு அன்பு முகில் அறக்கட்டளை சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் அன்புமுகில் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் இலக்கியா, அலையன்ஸ் கிளப் அன்பு தலைவர் சௌந்தரராஜன்,செயலாளர் வேலுச்சாமி, பொருளாளர் ஆனந்தராஜன், பிஆர்ஓ குமார்,அலையன்ஸ் நிர்வாகிகள் மாவட்ட அமைச்சரவை ஆலோசகர் பிரபாகரன், கேபினட் ட்ரேஸரர் பாலசுப்ரமணியம், ஜாயிண்ட் கேபினட் செக்ரெட்டரி மோகன் குமார்,மாவட்ட பிஆர்ஓ சண்முகம், ஜோன் சேர்பர்சன் பாலமுருகன்,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்